தற்போது இரட்டை இலை சின்னத்தின் செல்வாக்கு குறைந்து வருகிறது – டிடிவி தினகரன்
எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்காக இருந்தது என டிடிவி தினகரன் பேட்டி.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை வைத்து 5,000 – 10,000 வாக்குகள் மட்டுமே பெற முடியும். அவர்களால் வெற்றி பெற முடியாது.
செல்வாக்கு குறையும் இரட்டை இலை
எம்ஜிஆர், ஜெயலலிதாவிடம் இருந்த வரை இரட்டை இலை சின்னம் செல்வாக்காக இருந்தது. தற்போது அதன் செல்வாக்கு குறைந்து வருகிறது என குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், சின்னம் கிடைக்கவில்லை என்பதால்தான் தேர்தலில் போட்டியிடவில்லை; தேர்தலில் போட்டியிடக் கூடாது என யாரும் எங்களை நிர்பந்திக்கவில்லை. தேர்தல் ஆணையம் குக்கர் சின்னம் ஒதுக்காத காரணத்தினால், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை அமமுக என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.