இப்போது மக்களுக்கு தேவை உங்கள் அறிவுரை அல்ல, நிவாரணம் தான் – விசிக தலைவர் திருமாவளவன்!
இப்போது மக்களுக்கு தேவை உங்கள் அறிவுரை அல்ல, நிவாரணம் தான் என பிரதமர் உரை குறித்து விசிக தலைவர் திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி நேற்று மக்களுக்கு உரையாற்றுவதாக கூறியதும் ,மக்கள் நிவாரண உதவிகளை பிரதமர் மக்களுக்கு அறிவிப்பார் என எதிர்பார்த்திருந்தனர். ஏனென்றால் நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்திருப்பது ஒருபுறம் இருந்தாலும், மறுபுறம் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வருவதுடன், வேலை இல்லாத் திண்டாட்டம் ,பொருளாதார வீழ்ச்சி மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கான விலை ஏற்றம் என மக்கள் கடுமையாக அவதிக்குள்ளாகி கொண்டிருக்கின்றனர்.
ஆனால், திருவிழாக் காலம் வந்துவிட்டதால் முக கவசம் அணியாமல் யாரும் வெளியே செல்லாதீர்கள் என பிரதமர் அறிவுரை கூறியது பெருத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாகவும் மக்கள் மத்தியில் கூறப்படுகிறது. இந்நிலையில் இது குறித்து பேசிய விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் திருமாவளவன் அவர்கள், இக்கட்டான இந்த காலகட்டத்தில் பிரதமர் வாய்ப் பேச்சால் மட்டும் பேசிக் கொண்டிருக்காமல் மக்களுக்கு தேவையான உருப்படியான நலத்திட்டங்களை அறிவிப்பதற்கு முன் வர வேண்டும் என கூறியுள்ளார். மேலும் தற்பொழுது மக்களுக்கு தேவை உங்கள் அறிவுரை அல்ல; நிவாரணம் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதோ அந்த பதிவு,
#PrimeMinister Modi, what people need at the moment is not advice, they need relief! VCK insists that the PM come forward with programmes for people’s welfare instead of making empty, bombastic speeches!@PMOIndia @PTI_News pic.twitter.com/pXZiEzFd1P
— Thol. Thirumavalavan (@thirumaofficial) October 20, 2020