அதிமுகவில் தற்போது மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச்செயலாளராக ஆக முடியும் என டிடிவி தினகரன் பேச்சு.
மதுரையில் அமமுக செயல்வீரர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் டிடிவி தினகரன் அவர்கள் உரையாற்றினார்.
அப்போது பேசிய அவர், ஆகஸ்ட் 15ஆம் தேதி அமமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கூட உள்ளதாக ஆலோசனை கூட்டத்தில் அவர் பேசியுள்ளார். இதனை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்து பேசிய அவர், தற்போது மு.க.ஸ்டாலின் நினைத்தால் கூட அதிமுகவில் பொதுச்செயலாளராக ஆக முடியும்; அந்த அளவிற்கு தான் அதிமுக உள்ளது என தெரிவித்துள்ளார்.
மேலும், எடப்பாடி பழனிசாமி அணியினருக்கும் மடியில் டன் கணக்கில் பயம் உள்ளது. காக்கிசட்டைக்கே அஞ்சும் ஈபிஎஸ் அணியினர் லஞ்ச ஒழிப்புத்துறை என்றால் என்ன ஆவார்கள். அதிமுக பற்றி அமமுக பேச வேண்டிய அவசியம் இல்லை. நம்பிக்கை துரோகத்திற்கு மன்னிப்பே இல்லை. யாரிடமும் சமரசம் கிடையாது; அம்மாவின் ஆட்சியை மீட்பது தான் ஒரே இலக்கு என அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு…
டெல்லி : நாகாலாந்து பாஜக பெண் எம்பி ஒருவர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தன் அருகே…
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…