‘இனி மக்களுக்காக உழைப்போம்’ : த.வெ.க தலைவர் விஜய் பேச்சு!
சென்னை : இவ்வளவோ நாள் நமக்காக உழைத்தோம் இனிமேல் நாட்டு மக்களுக்காக உழைப்போம் என த.வெ.க. தலைவர் விஜய் கூறியுள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும் விழா சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிலையில், அதில் கலந்து கொண்ட கட்சி தலைவர் விஜய் கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.
விழாவில் கலந்து கொண்டு கொடியை அறிமுகம் செய்து வைத்த பிறகு பேசிய த.வெ.க. தலைவர் விஜய் ” என் நெஞ்சில் குடியிருக்கும் என் தோழர்களாகிய..என பேச தொடங்கியவுடன் அரங்கில் இருந்த அனைவரும் கரகோஷமிட்டனர். பின் பேசிய அவர் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என நெகிழ்ச்சியாக பேசினார்.
மேலும், தொடர்ந்து பேசிய விஜய் “இவ்வளவோ நாள் நமக்காக உழைத்தோம் இனிமேல் நாட்டு மக்களுக்காக உழைப்போம். த.வெ.க. கட்சி கொள்கையையும், செயல் திட்டங்களையும் விரைவில் அறிவிப்பேன். மனதிலும், வீட்டிலும் கட்சியை கொடியை ஏற்றி வைப்பீர்கள் நம்புகிறேன்” என்றார்.
கொடியில் மேலும், கீழும் சிவப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் இருந்தது. நடுவில் வாகைப்பூவும் அதனை சுற்றி 28 நட்சதரிங்களும் வட்ட வடிவில் அதனைகி சுற்றி இருந்தது. அந்த வாகைப் பூவின் இரு பக்கத்திலும் போர் யானைகள் இருந்தது. கொடிக்கு பின்னல் ஒரு சுவாரஸ்யமான வரலாற்றுக் குறிப்பு ஒன்று உள்ளது எனவும் விழாவில் விஜய் தெரிவித்தார்.
இது பற்றியும் பேசிய விஜய் “புயலுக்குப் பின் அமைதி மாதிரி, நம் கொடிக்குப் பின்னாலும் ஒரு வரலாறு உள்ளது. அதனை நான் மாநாட்டில் விளக்கமாக தெரிவிக்கிறேன். நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம்” என தனது உரையை முடித்தார்.