இனி தமிழகத்தில் BJP vs DMK தான்…! – பாஜக நிர்வாகி வி.பி.துரைசாமி
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
இரண்டு மாதத்திற்கு முன் செய்தியாளர்களிடம் சொன்னேன், இனி தமிழகத்தில் BJP vs DMK தான் என்ற நிலை உருவாகும் என்று, அது தான் இப்பொது நடந்துக் கொண்டிருக்கிறது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருகின்ற நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும், தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. தொகுதி பங்கீடு, வேட்பாளர் பட்டியல், தேர்தல் அறிக்கை, தேர்தல் பிரச்சாரம் என தவிரமாக செயல்பட்டு வருகிறது. இதனால், கட்சிகளுக்கு இடையே மாறி மாறி ஒருவரையொருவர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், பாஜக நிர்வாகி வி.பி.துரைசாமி சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், நாங்கள் ஆரோக்கியமாக இருக்கிறோம். இரண்டு மாதத்திற்கு முன் செய்தியாளர்களிடம் சொன்னேன், இனி தமிழகத்தில் BJP vs DMK தான் என்ற நிலை உருவாகும் என்று, அது தான் இப்பொது நடந்துக் கொண்டிருக்கிறது.
பின், அதிமுகவில் இருந்து தேமுதிக விலகல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த அவர், தேமுதிக விலகளால் எந்த பாதிப்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.