ஐஏஎஸ் அதிகாரிகள் மோடி அரசின் ஆட்சியில், பதவியை ஏன் ராஜினாமா செய்தார்கள் என்று இப்போது புரிகிறது – அமைச்சர் மனோ தங்கராஜ்
குடிமை பணிகள் மேற்கொள்ளும், அதிகாரிகளை, கட்சியின் விளம்பரத்திற்கு பயன்படுத்த துடிக்கிறது பாஜக என அமைச்சர் மனோ தங்கராஜ் ட்வீட்.
தெலுங்கானா மாநிலத்தில் ரேஷன் கடை ஒன்றில் பிரதமர் மோடியின் புகைப்படம் இல்லாததால் மாவட்ட ஆட்சியரை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வந்தது.
இது சர்ச்சையான நிலையில், இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில்,’மாலைக்குள் ரேஷன் கடை முன்பு பிரதமர் மோடியின் படத்துடன் பேனர் வைக்க வேண்டும். இல்லையேல் நானே பேனர் வைப்பேன். ஐஏஎஸ் படித்து, ஒன்றிய அரசுக்கு விசுவாசமாக, நியாயமாக நடந்துகொள்ள வேண்டும். புரிகிறதா?” என்று ஒரு மாவட்ட ஆட்சியரை பார்த்து சாடியுள்ளார் ஒன்றிய அமைச்சர் சீதாராமன்.
நியாயமாக நடந்து கொண்ட பல்வேறு ஐஏஎஸ் அதிகாரிகள் மோடி அரசின் ஆட்சியில், ஏன் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்றார்கள் என்பது இப்போது புரிகிறது. குடிமை பணிகள் மேற்கொள்ளும், அதிகாரிகளை, கட்சியின் விளம்பரத்திற்கு பயன்படுத்த துடிக்கிறது பாஜக. பொதுமக்களின் வரிப்பணத்தில் ரேஷன் அரிசி வழங்கிவிட்டு விளம்பரத்தில் சொந்த படம் இல்லை என்று அராஜக செய்வது எந்த வகையில் நியாயமானது? என பதிவிட்டுள்ளார்.
குடிமை பணிகள் மேற்கொள்ளும், அதிகாரிகளை, கட்சியின் விளம்பரத்திற்கு பயன்படுத்த துடிக்கிறது பாஜக. பொதுமக்களின் வரிப்பணத்தில் ரேஷன் அரிசி வழங்கிவிட்டு விளம்பரத்தில் சொந்த படம் இல்லை என்று அராஜக செய்வது எந்த வகையில் நியாயமானது? 3/3
— Mano Thangaraj (@Manothangaraj) September 5, 2022