இனி நில ஆவணங்களின் விவரம் அறிய புதிய செயலி; சட்டப்பேரவையில் அறிவிப்பு.!

Published by
Muthu Kumar

நில ஆவணம் தொடர்பான விவரங்களுக்கு இனி, புதிய செயலி உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகளின், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையில் 19 புதிய அறிவிப்புகளை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் வெளியிட்டார்.

இதன்படி இடம் சார்ந்த நில ஆவணங்களின் விவரங்களை அறிவதற்கு, புதிய செயலி உருவாக்கப்படும் என அறிவித்தார்.  நிலம் சம்பந்தப்பட்ட விவரங்கள் அடங்கிய புதிய செயலி உருவாக்கப்படும் என தனது அறிவிப்பில் அமைச்சர் வெளியிட்டார்.

மேலும் தமிழ்நாடு நில சீர்திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘குடும்பம்’ என்ற வரையறையில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் சம உரிமை வழங்கும் பொருட்டு திருமணம் ஆகாத மகள்கள் மற்றும் திருமணமாகாத பேத்திகள் என்ற சொற்கள் நீக்கப்படும் எனவும் சட்டப்பேரவையில் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அறிவித்தார்.

முன்னதாக வட்டாட்சியர், கோட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சான்றிதழ்கள் ஆன்லைன் வாயிலாக வழங்கப்படும் என தெரிவித்திருந்தார்.

Published by
Muthu Kumar

Recent Posts

பெரியார் பற்றி சீமான் சர்ச்சை பேச்சு : அதிமுக ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை கேள்வி!

பெரியார் பற்றி சீமான் சர்ச்சை பேச்சு : அதிமுக ஏன் கண்டிக்கவில்லை? செல்வப்பெருந்தகை கேள்வி!

சென்னை: நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது தந்தை பெரியார்…

34 minutes ago

கேரளாவிலும் பொங்கல் விடுமுறை! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா?

திருவனந்தபுரம் : நாளை முதல் பொங்கல் பண்டிகைகள் தொடங்க உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை (ஜனவரி 14) பொங்கல் தினம,…

53 minutes ago

“யுவராஜ் சிங்கிற்கு பிறகு சஞ்சு சாம்சன் தான்”…புகழ்ந்து தள்ளிய சஞ்சய் பங்கர்!

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெறவுள்ள 4 டி20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இந்திய…

1 hour ago

வாழ்வில் மகிழ்ச்சி பொங்க பொங்கல் வைக்க உகந்த நேரம் இது தான் ..!

பொங்கல் பண்டிகை கொண்டாடுவதற்கான காரணங்களும், அதன் சிறப்புகளும், பொங்கல் வைக்க சரியான நேரம் எது என்பதை பற்றி இந்த செய்தி…

2 hours ago

களைகட்டும் ஜல்லிக்கட்டு : அவனியாபுரத்தில் வெற்றிபெற்றால் என்ன பரிசு தெரியுமா?

சென்னை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் முடிந்து வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் தயாராகிவிட்டார்கள் என்று தான்…

2 hours ago

காஷ்மீர் சுரங்கப்பாதை : கடந்த வருடம் தீவிரவாத தாக்குதல்.. இந்த வருடம் பிரதமர் மோடி திறந்து வைப்பு!

காஷ்மீர் : ஜம்மு மற்றும் காஷ்மீரின் சோனாமார்க் மற்றும் காகங்கீர் இடையிலான 'இசட்-மோர்' (Z-Morh) சுரங்கப்பாதையை இன்று பிரதமர் மோடி திறந்துவைத்தார்.…

2 hours ago