இனி 5 நிமிடத்திற்கு 1 ரயில்..! மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு..!

சென்னை மெட்ரோ ரயில் நிர்வனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பொதுமக்கள் மற்றும் மெட்ரோ பயணிகளின் கோரிக்கை கருத்தில்கொண்டு திங்கள் முதல் சனிக்கிழமை வரை உச்ச நேரங்களில் ( peak hours) 7 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவை ஐந்து நிமிட இடைவெளியில் இயக்க முடிவு செய்துள்ளது.
எனவே இன்று முதல் மெட்ரோ ரயில் சேவைகள் உச்ச நேரங்களில் (peak hours) காலை 8 மணி முதல் 10 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் 7 மணி வரை ஐந்து நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் காலை 5. 30 மணி முதல் 8 மணி வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயக்கப்படும்.
சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் இரவு 10 மணி முதல் இரவு 11 மணிவரை 28 நிமிடங்களுக்கு பதிலாக 15 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவைகள் நாள் முழுவதும் உச்ச மணி நேரம் இல்லாமல் (non- peak hours) 20 நிமிட இடைவெளியில் இயக்கப்படும்.
அதற்கேற்ப பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025