‘நவம்பர்… தமிழகத்திற்கு அதிக மழை கொண்டு வரும்’ – விளக்கம் கொடுத்த வெதர்மேன்!
அடுத்ததாக உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் பலவீனமாகவே இருக்கும் என வெதர்மேன் பிரவீன் ஜான் தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம் தேதி புதிதாக ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாக ஒரு தகவல் வெளியாகியிருந்தது.
உருவாகவுள்ள அந்த காற்றழுத்த தாழ்வு பலவீனமாக இருக்கும் எனவும் தமிழகத்திற்கு இதனால் பாதிப்பு இல்லை எனவும் தனியார் வானிலை ஆய்வாளரான தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். இது குறித்து விளக்கமளித்து பதிவு ஒன்றையும் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
அந்த பதிவில், “அடுத்ததாக உருவாகவுள்ள குறைந்த காற்றழுத்தம்,பெரும்பாலும் அது பலவீனமாகவே இருக்கும். இதனால் தமிழகத்திற்கு பாதிப்பு இல்லை. மேலும், அடுத்த வாரம் வடக்கு அந்தமான் அருகே இந்திய-சீனாவில் இருந்து வரும் அடுத்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை பற்றி கவலைப்பட வேண்டாம்.
அது அந்தமான் கடலுக்குள் நுழையும் போது அது நமது சென்னை அட்சரேகைக்கு மேலே இருக்கும். இதனால், குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெறாத பட்சத்தில், அது தமிழகத்தை நோக்கி தள்ளப்படும். பெரும்பாலும் அது தீவிரமடைந்து மேலே சென்று விடும்.
வரும் நவம்பர் மாதம் தமிழகத்திற்கு நிறைய மழையைக் கொண்டு வரும். கிங்மேக்கர் MJO (மேடன்-ஜூலியன் அலைவு) இந்தியப் பெருங்கடலில் தனது இருப்பைக் காட்டப் போகிறது – நவம்பர் மாதம் தமிழகத்திற்கு நிறைய மழையைத் தரும். ஒவ்வொரு நிகழ்வுக்கும் முன் எங்கு கனமழை பெய்யும் என்பதை நாம் அறிவோம்”, என தமிழ்நாடு வெதர்மேன் அந்த பதிவில் பதிவிட்டிருந்தார்.
Next Low Pressure – Mostly it is not for Tamil Nadu unless it remains weak
———–
Lets not worry about the next low pressure that is coming from Indo-China near north Andaman next week, it will be above our Chennai latitude when it enters Andaman sea. So unless that low… pic.twitter.com/vN9OpaGJqg— Tamil Nadu Weatherman (@praddy06) October 18, 2024