புதிய வைரஸ் தாக்குதலுக்கு செத்து மடியும் சீனர்கள்.. இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்..

Default Image
  • சீனாவில் பரவி வரும் புதிய உயிர்கொல்லி வைரஸ்.
  • இந்தியாவில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடக்கம்.

பொதுவாகவே வைரஸ் நுண்ணுயிரிகள் தங்களின் உருவ அமைப்பை அடிக்கொருமுறை மாற்றிக்கொண்டே இருக்கின்றனர். இதன் காரணமாக இந்த வைரஸ் நுண்ணுயிரிகளுக்கு எதிராக மருந்து கண்டுபிடிப்பது பெரும் சவாலாக உள்ளது. இந்நிலையில் கடந்த 2002-ஆம் ஆண்டு நம் அண்டை நாடான சீனாவில் இருந்து பரவிய, கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த சார்ஸ் வைரஸ் மூலம் உலகளவில் சுமார் 700 பேர் வரை உயிரிழந்தனர்.

Image result for norovirus

இந்த வைரஸ் நுண்ணுயிரி புனுகுப் பூனையில் இருந்து மனிதர்களுக்கு பரவுகிறது. இதே கொரோனா குடும்பத்தை சேர்ந்த  மெர்ஸ் என்ற வைரஸ் சமீபத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து பரவியதன் மூலம் கடந்த ஆண்டு வரை 858 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் ஒட்டகங்களில் இருந்து மனிதர்களுக்கு பரவியது என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல், விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் இந்த கொரோனா வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த, நாவல் என்ற புதிய உயிர்க்கொல்லி வைரஸ்,தற்போது  அதாவது, 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31-ஆம் தேதி சீனாவின் வுஹான் நகரில் கண்டறியப்பட்டது.
இந்த நாவல் வைரஸ் சீனாவில் இதுவரை 40-க்கும் மேற்பட்டோரை  தாக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில்,  2 பேர் உயிரிழந்தனர்.

Image result for norovirus in chinese

சீனாவில் இருந்து ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சென்ற தலா ஒருவருக்கு இந்த வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் தாக்குதலின் அறிகுறிகள்: காய்ச்சல், இருமல், சுவாச பிரச்னைகள் போன்ற அறிகுறிகளுடன் தொடங்கி, நிமோனியா வரை செல்லும்.  இந்த வைரஸ் தொற்றின் பாதிப்பை, உரிய நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால் சிறுநீரகம் போன்ற உறுப்புகள் செயலிழந்து உயிரிழப்பு ஏற்படும். இந்நிலையில், இந்த விவகாரத்தில் எந்த நாடும் இதுவரை பயணங்களுக்கு தடை விதிக்கவில்லை என கூறிய உலக சுகாதார நிறுவனம், (WHO) முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.
இந்த உயிர்கொள்ளி நாவல் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்ட வுஹான் நகரில் இந்திய மாணவர்கள் 500 பேர் தற்போது கல்வி பயின்று வருகின்றனர்.தற்போது அங்கு  சீன புத்தாண்டு விடுமுறையின் காரணமாக ஏராளமானோர்  இந்தியா வந்துள்ளனர்.

Related image

இந்நிலையில், சீனாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மருத்துவ சோதனை நடத்தும்படி மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.  இதேபோல், சீனாவில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு, சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்