1933 காலிப்பணியிடங்கள்…மாநகராட்சி, நகராட்சிகளில் வேலை வாய்ப்பு.! தமிழக அரசு அறிவிப்பு.!

Tngovt-1

தமிழக நகராட்சி, மாநகராட்சிகளில் காலியாக உள்ள 1,933 காலிப்பணியிடங்களுக்கு பிப்.9 முதல் மார்ச்.12 வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1933 காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளது.

இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள தமிழக அரசு, விண்ணப்பதாரர்கள் வரும் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ளது. அதன்படி, விண்ணப்பதாரர்கள் https://tnmaws.ucanapply.com என்ற வலைதளம் வாயிலாக (09.02.2024) முதல் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் (12.03.2024) அன்று மாலை 05.45 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் வீடுகளில் என்.ஐ.ஏ சோதனை!

விரிவான தகவலுக்கு விண்ணப்பதாரர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விளக்கமான அறிவிப்பு மற்றும் தேர்வாளர்களுக்கான வழிமுறைகளை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்