வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், நேற்று வாணியம்பாடி காய்கறி சந்தையில் ஆய்வு செய்த நகராட்சி ஆணையர் சிசில் தாமஸ் நடைபாதை வியாபாரிகள் விதிமீறல் மீறியதாக கூறி காய்கறி பழங்களை தரையில் தூக்கி வீசினார்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சிசில் தாமசின் இந்த செயலுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்த நிலையில், சிசில் தாமஸ், வியாபாரிகளிடம் வருத்தம் தெரிவித்தார். கிழே தள்ளிவிட்ட பழங்களுக்கான இழப்பீட்டையும் வழங்கினார்.
இந்நிலையில், மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்து. வாணியம்பாடி நகராட்சி ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் பிரபல சுற்றுலாத் தலமான பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம்…
ஹைதராபாத் : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், ஹைதராபாத் அணியும் மோதியது. வழக்கமாக இந்த சீஸனில் இதுவரை…
பஹல்காம் : தீவிரவாதத் தாக்குதலையடுத்து, ஏப்ரல் 23 அன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு குறித்து அமைச்சரவைக் குழு…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…
ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…