சித்த மருத்துவர் ஷர்மிகாவுக்கு நோட்டீஸ்..!- இந்திய மருத்துவத்துறை ஆணையர்

Default Image

சித்த மருத்துவர் சார்மிகாவுக்கு இந்திய மருத்துவ முறைகளுக்கான இயக்குநரகம் நோட்டீஸ்

பாஜகவை சேர்ந்த  மகளான டாக்டர் ஷர்மிகா ஒரு சித்த மருத்துவர். அவர் இணையத்தில் உடல்நலம் சம்பந்தமான நிறைய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

இவரது கருத்துக்களுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்த நிலையில், சமீப நாட்களாக இவர் கூறிய கருத்துக்கள் அறிவியலுக்கு புறம்பாக இருப்பதாக தெரிவித்து பலரும் ட்ரோல் செய்து வருகின்றனர்.

மேலும் பெண்கள் கவிழ்ந்து படித்தால் மார்பக புற்றுநோய் வரும் என்றும், கடவுள் மனசு வைத்தால் தான் குழந்தை பிறக்கும் என்றெல்லாம் தெரிவித்திருந்தார். இவரது கருத்து சர்ச்சைக்குள்ளான நிலையில்,  சித்த மருத்துவர் சார்மிகாவுக்கு இந்திய மருத்துவ முறைகளுக்கான இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விசாரணை குழுவின் முன் ஆஜராகி விளக்கம் அளிக்க ஷர்மிகாவுக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்