பேஸ்புக், கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் – உயர்நீதிமன்றம் உத்தரவு.!
பேஸ்புக், கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
சமூக வலைத்தளங்களை வழிமுறைப்படுத்தும் விதிமுறைகளை மேற்கொள்வது தொடர்பாக உத்தரவிட கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. அதாவது, பேஸ்புக், யூடியூப் வீடியோவை தணிக்கை செய்த பின் வெளியிட உத்தரவிட கோரி வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தபோது, அங்கீகரிக்கப்பட்ட செய்தி சேனல்களை தவிர வேறு எந்த நிறுவனமும் நேரடி ஒளிபரப்பு செய்யக்கூடாது என மனுதாரர் வாதமாக இருந்தது.
சமூக வலைத்தளங்கள் தங்களுக்கான தண்ணிக்கையை தாங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் தொடர்பாக புகார்கள் ஏதும் வரும்பட்சத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு சார்பில் வாதம் வைக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விளக்கமளிக்குமாறு பேஸ்புக், கூகுள், யூடியூப் நிறுவனங்களுக்கு நோட்டிஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டது. உமா மகேஸ்வரன் என்பவர் தொடர்ந்த வழக்கை 2 வாரத்திற்கு ஒத்திவைத்து நீதிமன்றம் என்பது குறிப்பிடத்தக்கது.