#Breaking:225 BE கல்லூரிகளுக்கு திடீர் நோட்டீஸ்;மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி இல்லை – அண்ணா.பல்.கழகம் எச்சரிக்கை!
தமிழகத்தில் உள்ள 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.அதில்,தகுதியான ஆசிரியர்கள் மற்றும் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது குறித்து கல்லூரிகள் இரண்டு வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என அண்ணா பல்.கழகம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி,உரிய விளக்கம் தராத கல்லூரிகளுக்கு அங்கீகார நீட்டிப்பு இல்லை என்றும்,மாணவர் சேர்க்கைக்கும் அனுமதி வழங்கப்படாது எனவும் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் தங்களது கட்டுப்பாட்டின்கீழ் உள்ள 476 பொறியியல் கல்லூரிகளை ஆய்வு செய்த பிறகு அதில் 225 கல்லூரிகளுக்கு இத்தகைய உத்தரவை அண்ணா பல்.கழகம் பிறப்பித்துள்ளது.