#BreakingNews : சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில் நோட்டீஸ்
ரூ.300 கோடி மதிப்பிலான சசிகலா சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக நோட்டீஸ் ஒட்டியது வருமான வரித்துறை.
கடந்த 2017 -ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது உறவினர்களின் இல்லங்கள் ,அலுவலகங்கள் என பல இடங்களில் சோதனை நடைபெற்றது.இந்த சோதனையில் சசிகலா 60-க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை தொடங்கி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதில் பல கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் வாங்கிய ஆவணங்களும் சிக்கியதை தொடர்ந்து சசிகலா உறவினர்கள் உட்பட அனைவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. வருமான வரித்துறையினர் ரூ.1600 கோடிக்கு மேல் சசிகலா நிறுவனங்களின் சொத்துக்களை முடக்கியுள்ளதாக தகவல் தெரிவித்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சசிகலாவிற்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.இதனிடையே சசிகலாவின் ரூ.300 கோடி மதிப்பிலான சொத்துகளை பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கம் செய்தனர். இதுதொடர்பான தகவல் சசிகலாவுக்கு நோட்டீஸ் மூலம் தெரிவிக்கப்பட்டது.
தற்போது புதிதாக கட்டி வரும் வீட்டில் சொத்துகளை முடக்கியதற்கான நோட்டீஸை ஒட்டியது வருமான வரித்துறை.