ஜனவரி 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் போராட்டம் அறிவிப்பு!

Communist Party

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. அதைப்போல சென்னையை தொடர்ந்து தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்து வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தால் கோவில்கள் மற்றும் வீடுகள் என பல சேதமடைந்தது.

சேதமடைந்துள்ளதை சீர் செய்யவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க மத்திய அரசிடம் நிதி கேட்டு தமிழக முதலவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருந்தார். ஆனால், போதுமான நிதியை மத்திய அரசு வழங்க வில்லை என கடந்த சில நாட்களாக பெரிய விவாதமே நடந்து வந்தது.

இந்நிலையில், சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை சரிசெய்ய தமிழக அரசு மத்திய அரசிடம் நிதி கேட்டிருந்தது. ஆனால் அவர்கள் நிவாரண நிதி ஏதும் வழங்கவில்லை என்று ஆளுங்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்தனர். இதனை கண்டித்து ஜனவரி 8ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒன்றிய அரசு அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்துள்ளது.

ஒரே மேடையில் பிரதமர் மோடி – முதல்வர் மு.க.ஸ்டாலின்.! திருச்சி பல்கலைக்கழகத்தில் ஏற்பாடுகள் தீவிரம்.!

இதற்கிடையில், தமிழக அரசு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்துள்ளது, தமிழக அரசை எதிர்த்து ஒருகாலும் சொல்லமாட்டேன் என்று எண்ணூரில் கச்சா எண்ணெய் கசிவுக்கு அரசு அறிவித்த நிவாரணம் தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு CPI மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆவேசமாக பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்