மாற்றுச் சான்றிதழ் உள்ளிட்டவை பெற ஜிஎஸ்டி- அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
பட்டப்படிப்பு சான்று, மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவற்றுக்கு 18% ஜிஎஸ்டி வரி
அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சேவைகளில் சிலவற்றிற்கு 18% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளது. அதன்படி மாணவர்கள் தங்கள் சான்றிதழ்களில் மேற்கொள்ளப்படும் திருத்தங்கள், சான்றிதழ்கள் தொலைந்து போனால் மாற்று சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிப்பது போன்ற 16 சேவைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரி விதிப்பு கொண்டு வரப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
தேர்வு கட்டணம், மறுமதிப்பீடு செய்வதற்கான கட்டணம், புரோவிஷனல் சான்றிதழ், டிகிரி சான்றிதழ், ரேங்க் சான்றிதழ், மறு ஆய்வு கட்டணம் போன்ற சேவைகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது.