மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க தேதிகளை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.
மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான செப்டம்பர்-அக்டோபரில் நடைபெற்ற பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்கள் விடைத்தாள்களின் நகல்களை கோரியும் , மறுகூட்டல் செய்ய கோரியும் மற்றும் மறுமதிப்பீட்டிற்காகவும் விண்ணப்பிப்பதற்கான தேதியை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது .
விடைத்தாள்களின் நகல்களை பதிவிறக்கம் செய்ய விரும்புவர்கள் வரும் புதன்கிழமை காலை 11 மணி முதல் http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள Notification பக்கத்தில் சென்று தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியினை பதிவு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பதிவிறக்கம் செய்த நகலினை அதே இணையத்தில் உள்ள Notification பக்கத்தில் சென்று அதிலுள்ள Application for Retotaling/Revaluation என்பதனை கிளிக் செய்து வெற்று விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, அதனை வரும் 19-ஆம் தேதி காலை 10 மணி முதல் 20-ஆம் தேதி மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்த பின்னர் இரு நகல்களுடன் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மறுமதீப்பீடு செய்யும் மாணவர்கள் பாடம் ஒன்றிற்கு ரூ.505 என்ற வீதமும், அதே போன்று மறுகூட்டலுக்கு விண்ணப்பித்தவர்களில் 305 ரூபாயை உயிரியல் பாடத்திற்கும் , பிற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும் ரூ.205 என்ற வீதமும்
முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பணமாக செலுத்த வேண்டும் என்றும் அரசு தேர்வுகள் இயக்குநர் உஷாராணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…