உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை -முதலமைச்சர் பழனிசாமி விளக்கம்
உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் சுமார் 3 வருடங்களுக்கு மேலாக நடைபெறாமல் உள்ளது.தற்போது வருகின்ற டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெறவுள்ளது என்று தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.இதனால் கட்சிகள் அனைத்தும் உள்ளாட்சித் தேர்தலுக்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது.ஆனால் இதற்கு இடையில் தமிழகத்தில் புதிதாக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டது.உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் புதிதாக மாவட்டங்களை பிரித்தால் எப்படி தேர்தல் நடத்த முடியும் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியது.
இந்த நிலையில் இதற்கு பதில் அளிக்கும் விதமாக முதலமைச்சர் பழனிசாமி தென்காசியில் பேசியுள்ளார்.அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போடுகின்றனர். ஆனால் நிச்சயம் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும்.உள்ளாட்சித் தேர்தலுக்கும் புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.