ஆட்சியில் இருந்தும் சின்ன விஷயம் கூட செயல்படுத்த முடியல… புதுச்சேரி முதலமைச்சர் ஆதங்கம்.!
ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒரு சின்ன முடிவு எடுத்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்த்து அனுமதி பெற வேண்டியதாக இருக்கிறது. – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி.
இன்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படையாக மேடையிலேயே வெளிப்படுத்திவிட்டார். அதுவும், மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் முன்னிலையிலேயே வெளிப்படுத்திவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
நிகழ்வில் முதல்வர் கூறுகையில், புதுச்சேரியை சிங்கப்பூர் மாதிரி மாற்ற வேண்டும் என்று நினைத்தேன். ஆனால் ஆட்சி பொறுப்பேற்று கடந்த ஒன்றரை வருடமாக சொல்லிகொண்டு தான் இருக்கிறோம் என வெளிப்படையாக பேசினார்.
மேலும், ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒரு சின்ன முடிவு எடுத்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்த்து அனுமதி பெற வேண்டியதாக இருக்கிறது. அதனால் செயல்பாடுகளில் காலதாமதம் ஏற்படுகிறது. என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமிதனது ஆதங்கத்தை தெரிவித்தார்.
மேலும், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கூறும்போது மத்திய அமைச்சர் கிஷான் ரெட்டி மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் மேடையில் உடன் இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.