ஈரோடு இடைத்தேர்தல்.. நாதகவை பின்னுக்கு தள்ளி முன்னுக்கு வந்த நோட்டா.!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் தபால் வாக்குகளில் நாம் தமிழர் கட்சியை பின்னுக்கு தள்ளி, நோட்டா18 வாக்குகளுடன் 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.
![Seethalakshmi - NOTA](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Seethalakshmi-NOTA-.webp)
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் பெறப்பட்ட வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி, 34,000 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக தொடர்ந்து முன்னிலை பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி திமுக வேட்பாளர் சந்திரகுமார் 43,488 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாதகவின் சீதாலட்சுமி, 9,152 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார். மேலும், 1,976 வாக்குகள் பெற்று நோட்டா 3ஆம் இடம் பிடித்துள்ளது.
சொல்லப்போனால், ஈரோடு கிழக்கில் கடந்த இடைத்தேர்தலில் நோட்டா வெறும் 798 வாக்குகள் மட்டுமே பெற்ற நிலையில், தற்போது 5-வது சுற்று முடிவிலேயே கிட்டத்தட்ட இரு மடங்காக 1,976 வாக்குகளை பெற்றுள்ளது.
அதுமட்டும் இல்லாமல், தபால் வாக்குகளில் நோட்டாவானது நாம் தமிழர் கட்சியை முந்திருக்கிறது. இதன் மூலம், தபால் வாக்குகள் எண்ணிக்கையில் இரண்டாவது இடத்தில் உள்ளது நோட்டா. அதன்படி, நோட்டாவுக்கு 18 வாக்குகளும், நாதகவுக்கு 13 வாக்குகளும் கிடைத்துள்ளன. திமுகவுக்கு அதிகபட்சமாக 197 வாக்குகள் கிடைத்திருக்கிறது குறிப்பிடத்தக்கது.