சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் வரவில்லை…!பதவியை ராஜினாமா செய்ய நான் ரெடி …!எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட தயார்…!கருணாஸ் அதிரடி
பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட தயார் என்று எம்எல்ஏ கருணாஸ் தெரிவித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் (செப்டம்பர் 25 ஆம் தேதி)சபாநாயகரின் உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு அளித்தார் 3வது நீதிபதி சத்யநாராயணன்.மேலும் அதேபோல் 18 எம்.எல்.ஏக்களின் மனுக்களை தள்ளுபடி செய்தார் நீதிபதி சத்தியநாராயணன்.
நேற்று மதுரை தனியார் விடுதியில் டிடிவி தினகரனுடன் எம்எல்ஏ கருணாஸ் சந்தித்தார்.டிடிவி-கருணாஸ் சந்திப்பின்போது தங்க தமிழ்ச்செல்வன், சாத்தூர் சுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.
இதன் பின் எம்எல்ஏ கருணாஸ் கூறுகையில், தினகரனை சந்தித்ததற்காக எனக்கு சபாநாயகர் நோட்டீஸ் கொடுத்தால் அதை சட்டப்பூர்வமாக சந்திக்க தயார்.
மேலும் ஜெயலலிதா இறந்த பிறகு அதிமுகவில் என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. அதிமுகவில் தற்போது அணி, அணியாக பிரிகிறார்கள். அணி அணியாக சேருகிறார்கள் என்றும் கருணாஸ் தெரிவித்தார்.
அதேபோல் இன்றும் அவர் புதுக்கோட்டையில் கூறுகையில், சபாநாயகரிடம் இருந்து நோட்டீஸ் எதுவும் வரவில்லை, நோட்டீஸ் வந்தால் பதிலளிக்க தயாராக இருக்கிறேன். பதவியை ராஜினாமா செய்துவிட்டு, எந்த தொகுதியில் வேண்டுமானாலும் போட்டியிட தயார் என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.