கொரோனாவின் தாக்கம் குறையாததால் நிபந்தனையுடன் திறக்கப்படும் கடைகளில் AC பயன்படுத்த கூடாது என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
கொரோனா வைரஸால் நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கானோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டே தான் இருக்கின்றனர். இதுவரை 253,241 பேர் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர்.
தமிழகத்திலும் பலர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் அதிகம் கொரோனா பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளது சென்னை தான். இருப்பினும் மக்களின் அத்தியாவசியமான அன்றாட தேவைகளை கருத்தில் கொண்டு தமிழகத்தில் அதிகம் கொரோனா பாதிப்பு இல்லாத இடங்களில் கடைகள் திறக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அதன் படி, தனிக் கடைகள் (முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் தவிர), ஹார்டுவேர், சிமெண்ட், கட்டுமானப் பொருட்கள், சானிடரிவேர், எலெக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் தனிக் கடைகள், மொபைல் போன், கணிப்பொறி, வீட்டு உபயோகப் பொருட்கள், மின் மோட்டார், கண் கண்ணாடி விற்பனை மற்றும் பழுது நீக்குதல் உள்ளிட்ட தனிக்கடைகள், காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சென்னையிலும் இந்த முறைகள் செயல்படுத்தப்படும் நிலையில், தற்பொழுது AC உள்ள கடைகள் திறக்கலாம் ஆனால், AC உபயோகிக்க கூடாது, கடைக்கு வெளியே AC பயன்படுத்தவில்லை என சுவரொட்டி இருக்க வேண்டும் எனவும் சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…