கொரோனா வைரஸால் இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட்டுள்ளனர்.தமிழகத்தில் 30-க்கும் மேற்பட்டோர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதன் பகுதியாக தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிலர் ஊரடங்கு உத்தரவினை மீறி வாகனங்களில் சுற்றி திரிந்ததையும் அவர்களுக்கு காவல்துறையினர் நூதன தண்டனைகளும் வழங்கி வருகின்றனர் .இந்நிலையில் திருச்சி மத்திய மண்டலத்தில், ஊரடங்கு உத்தரவை மீறியதாக 1289 பேர் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர்.பின்னர் அவர்கள் காவல்நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். மேலும் 802 இருசக்கர வாகனங்கள் மற்றும் 22 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டது . எனவே ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்த்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது வலுபெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
கோவை : 1998ஆம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைதாகி நீண்ட வருடம் சிறையில் இருந்து வந்த அல்…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி தொடங்கி இன்று (டிசம்பர் 20) நிறைவு பெற்றது. கடந்த…
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் – அஜ்மீர் நெடுஞ்சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு அருகே இன்று காலை லாரி மோதியதில்…
சென்னை: நடிகர் அஜித் குமார் நடிப்பில் விரைவில் வெளிவரவிருக்கும் விடமுயற்சி"படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தில் உள்ளன. ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகும்…
ஸ்பெயின் : தற்போதைய நவீன உலகத்தில், ஒருவர் தான் செய்யும் இந்த குற்ற செயல் யாருக்கும் தெரியாது என நினைத்து…