ஆளுநர் உரை மட்டுமல்ல ஒட்டுமொத்த கூட்டத்தொடரும் புறக்கணிப்பு – முக ஸ்டாலின் அறிவிப்பு

Published by
பாலா கலியமூர்த்தி

தமிழக ஆளுநர் ஊழலுக்கு துணை நிற்கும் வகையில் இருந்து கொண்டிருக்கிறார் என்று வெளிநடப்பு செய்த திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் தொடங்கியது. நடப்பு ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் உரையுடன் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. கூட்டத்தில் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்க தாமதம் செய்வதை சுட்டிக்காட்டி, திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளுநர் உரைக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பி, வெளிநடப்பு செய்தனர்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முக ஸ்டாலின், ஆளுநர் உரையை தொடங்குவதற்கு முன்னாள் நான் பேச முயற்சி செய்தேன். அதற்கு ஆளுநர் என்னை பேச அனுமதிக்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு ஒரு லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தமிழகம் வளம் பெற்றிருக்கு என்று ஆளுநர் கூறினார். இதற்கு நான் என்னுடைய கருத்தை தெரிவித்து நேற்று விமர்சித்திருந்தேன். ஏற்கனவே, கடந்த 20215-ஆம் ஆண்டு பட்ஜெட்டை வெளியிட்டபோது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என அறிவித்திருந்தார்கள்.

இதையடுத்து 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு, பிரதமர் மோடி மதுரைக்கே நேரடியாக வந்து அடிக்கல் நாட்டு விழா என்ற ஒரு நாடகத்தை நடத்திவிட்டு சென்றார். ஆகையால், அறிவித்தது 2015, அடிக்கல் நாட்டியது 2019, இப்போ 2021. இதுவரைக்கும் அப்பகுதியில் ஒரு செங்கலை கூட எடுத்து வைக்கவில்லை. இதுதான் பட்ஜெட்டின் உண்மை. இதற்குத்தான் இந்த பட்ஜெட்டை லாலிபாப் என்று விமர்சனம் செய்துள்ளேன். மத்திய பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் மீதான விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. விலைவாசி விஷம்போல் ஏறிக்கொண்டு செல்கிறது. எனவே, விவசாயிகளுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் இந்த பட்ஜெட் போடவில்லை.

கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு மத்திய அரசு பட்ஜெட் போட்டிருக்கு. அதுமட்டுமில்ல ஆளுநர் பேசியதில், எங்களுக்கு பிடித்தது, என்னவென்றால் உட்காருங்கள் இந்த அரசாங்கத்தின் இதுதான் இறுதியான பட்ஜெட் என்று தெரிவித்தார். அவையை புறக்கணிதத்துக்கு காரணம், கடந்த டிசம்பர் மாதம் ஆளுநரை சந்தித்து அதிமுக அரசின் மீது முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் மீது ஆதாரத்துடன் புகார் அளிக்கப்பட்டது. இதுவரை ஆளுநர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுநர் ஊழலுக்கு துணை நிற்கும் வகையில் இருந்து கொண்டிருக்கிறார். மேலும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை.

எனவே அதையும் கண்டித்து ஆளுநர் உரையை மட்டுமல்ல, கூட்டத்தொடர் முழுவதும்  புறக்கணிப்பு செய்வதென்று முடிவு செய்துள்ளோம். முதல்வர், துணை முதல்வர் மற்றும் அமைச்சர்கள் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை கூட்டிப்பார்த்தால் ஓராண்டு பட்ஜெட்டே போடா முடியும். அந்தளவுக்கு கொள்ளையடித்து வைத்துள்ளார்கள். இதனை எடுத்துக்கூற சட்டமன்றத்தில் வாய்ப்பு கிடைக்காது. அதனால் இங்கிருந்து பேசுவது எந்த பயனும் இல்லை. பேசுவதற்கு நிச்சியம் அனுமதிக்க போறதில்லை. அதனால் மக்கள் மன்றத்துக்கு சென்று ஆதாரத்துடன் எடுத்துரைக்க கடமைப்பட்டுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

30 பேர் சுட்டுக்கொலை! 190 பேர் மீட்பு! மற்றவர்கள் நிலை? பாக். ரயில் கடத்தல் அப்டேட்…

இஸ்லாமாபாத்  : பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாண தலைநகர் குவெட்டாவிலிருந்து வடக்கு நகரமான பெஷாவருக்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலை நேற்று…

8 minutes ago

யாருக்கு அறிவில்லை? அமைச்சர் பி.டி.ஆர் vs அண்ணாமலை வார்த்தை போர்!

சென்னை : தேசிய கல்வி கொள்கையை ஆதரிக்கும் வகையில் உள்ள PM Shri திட்டத்தில் தமிழகத்தை இணைக்க மத்திய அரசு…

1 hour ago

மார்ச் 22-ஐ குறிவைத்து காத்திருக்கும் திமுக! பல்வேறு மாநில ஆளும்கட்சி, எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு!

சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதிகள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாக திமுக தொடர்ந்து கூறிவருகிறது. இந்த தொகுதி…

2 hours ago

பங்கு நானும் வரேன்.., ஏர்டெலை தொடர்ந்து ஜியோ-வின் ‘ஸ்டார்லிங்க்’ சம்பவம்!

டெல்லி : அதிவேக இன்டர்நெட், நகர்ப்புறம் முதல் கிராமப்புறம் வரையில் தடையில்லா இணைய சேவை உள்ளிட்டவற்றை நோக்கமாக கொண்டு இந்திய …

3 hours ago

விராட், ரோஹித் எல்லாம் ஓரம் போங்க! இன்ஸ்டாவில் சம்பவம் செய்த ஹர்திக் பாண்டியா!

துபாய் : இன்ஸ்டாகிராம் தளத்தில் கிரிக்கெட் வீரர்களுக்கு இருக்கும் வரவேற்பை பெற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உதாரணமாக சொல்லவேண்டும் என்றால் விராட்…

4 hours ago

உங்களை கல்யாணம் பண்ண எப்படி மாறனும்? பதில் சொல்லி ரசிகரை அழவைத்த மாளவிகா!

சென்னை : சமூக வலைத்தளங்களில் மாளவிகா மோகனன் ஒரு போஸ்ட் ஒன்றை போட்டாலே போதும் லைக்குகளும், கமெண்டுகளும் மலைச்சாரல் போல…

5 hours ago