டிஜிபி மட்டுமல்ல, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது -தினகரன்
சசிகலா அதிமுக கொடியை பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்று தினகரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கொரோனாவிற்கான சிகிச்சையை சசிகலா பெற்று வந்த நிலையில் கடந்த 31-ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.மருத்துவமனையில் இருந்து புறப்படும் போது சசிகலாவுக்கு சொந்தமான காரின் முகப்பில் அதிமுக கொடி பொருத்தப்பட்டு இருந்தது.இது அரசியலில் களத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனால் சசிகலா காரில் அதிமுக கொடி பயன்படுத்தியதால் அதிமுக அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தனர்.வருகின்ற 8-ஆம் தேதி தமிழகத்திற்கு வரும்போது காரில் அதிமுக கொடியை பயன்படுத்தாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகாரில் தெரிவிக்கப்பட்டது.இதன் பின் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில்,சசிகலா மீண்டும் கொடியை பயன்படுத்தக்கூடாது என்பதற்காக புகார் அளித்துள்ளோம்.சசிகலா அதிமுக உறுப்பினார் இல்லை.உறுப்பினராக இல்லாதவரை எதற்காக கட்சியிலிருந்து நீக்க வேண்டும். அவர் கொடியை பயன்படுத்த எந்த தார்மீக உரிமையும் இல்லை.அதிமுக கொடியை தலைவர்கள் ,தொண்டர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்று கூறினார்.
இந்நிலையில் அமமுக பொதுச்செயலாளர் தினகரன் கூறுகையில், சசிகலா கொடியை பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.டிஜிபி மட்டுமல்ல, முப்படை தளபதிகளிடம் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய இயலாது.வேணுமென்றால் நீதிமன்றத்திற்கு செல்லட்டும்.நீதிமன்றம் முடிவு எடுக்கும் வரை காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.