நம் பிள்ளைகள் பாஸ் ஆகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர நடத்தப்படும் நீட் நுழைவுத்தேர்வு, இன்று மதியம் 2 மணி முதல் 5 மணி வரை நடைபெற்றது. கொரோனா பரவும் சூழலில், நீட் தேர்வுகளை ஒத்திவைக்க பல்வேறு தலைவர்கள், அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வந்தனர். மேலும், நீட் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்துள்ளது.
ஆயினும், 11 மணிக்கு மேல் மாணவர்கள் அனைவரும் பேட்ச் வரிசையாக தேர்வறைக்குள் அனுப்பப்பட்டனர். ஆனால் தேர்வு மையத்திற்குள் உணவு பொருட்கள் கொண்டுசெல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் பசியுடன் நீட் தேர்வுகளை எழுதியுள்ளனர்.
இந்தநிலையில் திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர், மாணவர்கள் பாஸ் ஆகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என தெரிவித்துள்ளார்.
மேலும், 2 மணி தேர்வுக்குக் காலை 11-க்கே வந்துவிட வேண்டும் என கூறிய அவர், மதிய உணவு இல்லையெனவும், அறிவிப்பு பலகை கூட தமிழில் இல்லையென தெரிவித்தார். கையுறைகூட குறிப்பிட்ட நிறத்தில் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளதாக தெரிவித்த அவர், வெயிலில் காத்திருக்கும் பெற்றோர்களுக்கு கழிப்பறை வசதி கூட இல்லை என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, நம் பிள்ளைகள் பாஸாகி விடக்கூடாது எனும் சூழ்ச்சியே இன்றைய நீட் தேர்வு கெடுபிடிக்கான காரணம் என கூறியுள்ளார்.
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…
திருவனந்தபுரம் : கேரளாவில் புகழ்பெற்ற இலக்கிய எழுத்தாளர், திரைப்பட திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் என பன்முகதிறமை கொண்ட எம்.டி.வாசுதேவன்…
சென்னை : அண்மையில் சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் குகேஷ்,…