கோர்ட்டின் உத்தரவை பின்பற்றுவதில்லை.. மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!
வனப்பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பது குறித்த வழக்கில் உயர்நீதிமன்றம் கண்டனம்.
பல்வேறு வழக்குகளில் மத்திய அரசு நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றுவதில்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை கண்டனம் தெரிவித்துள்ளது. அதாவது, உயர்நீதிமன்ற உத்தரவுகளை மத்திய அரசும், நிதி அமைச்சகமும் செயல்படுத்துவதில்லை என நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். வழக்கறிஞர் தீரன் முருகன் மனுவை விசாரித்தபோது உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாத மத்திய அரசு, அதன் உத்தரவுக்கு தடை உத்தரவிட்டால் மட்டும் உடனடியாக மேல்முறையீடு செய்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? என எழுப்பியுள்ளனர்.
மத்திய அரசு வனப்பாதுகாப்பு திருத்த மசோதா முன்மொழிந்துள்ளது, இது குறித்து 15 நாட்களில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பில் கூறியுள்ளது. ஆனால், இந்தி, ஆங்கிலம் தெரியாதவர்கள் இதில் கருத்து தெரிவிக்க முடியாது என்பதால் மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணைக்கு தடை விதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவைய் விசாரித்த நீதிபதிகள், வனத்திருத்த சட்டம் தொடர்பான அறிவிப்பாணைக்கு தடை விதித்தனர். தடை உத்தரவை ரத்துசெய்ய கோரி உஉயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்த நிலையில், வனப்பாதுகாப்பு தொடர்பான கருத்துக்களை தெரிவிப்பது குறித்த வழக்கில் மத்திய அரசு முறையீடு செய்த நிலையில் நீதிபதிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.