திமுக அரசு மீது அதிருப்தி தெரிவிக்கவில்லை – அமைச்சர் சேகர்பாபு
ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் என அமைச்சர் சேகர்பாபு நம்பிக்கை.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில், தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. பிரதான கட்சிகளான அதிமுக, திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அளும் அரசின் அமைச்சர்கள், எதிர்க்கட்சிகள் முன்னாள் அமைச்சர்கள் என கட்சி நிர்வாகிகள் ஈரோட்டை நோக்கி படையெடுக்க தொடங்கியுள்ளனர்.
மேலும், பல்வேறு இடங்களில் நூதன முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சேகரிப்பின்போது திமுக அரசு மீது பல்வேறு குற்றசாட்டுகளை அதிமுக எடுத்துவைத்து வருகிறது. காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து, திமுக அமைச்சர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் காலை 6 மணி முதலே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வால்டாக்ஸ் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வடிகால் பணிகளை நேரில் ஆய்வு செய்த பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் சேகர்பாபு, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு வாக்கு கேட்டு சென்றபோது எந்த இடத்திலும் திமுக அரசு மீது மக்கள் அதிருப்தி தெரிவிக்கவில்லை என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் வெற்றி பெறுவார் கூறினார்.