கூண்டுக்கிளியல்ல கூவும் குயில்கள்…எச் ராஜாவுக்கு பதிலடி கொடுத்த அமைச்சர் சேகர் பாபு!

குற்றவாளிகள் என்று சொல்வதற்கு அண்ணாமலையை ஆதாரம் காட்டச் சொல்லுங்கள் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

sekar babu ABOUT BJP

சென்னை : திருச்சி மாவட்டத்தில்  நேற்று பாஜக சார்பில் தேசிய கல்வி கொள்கைக்கு ஆதரவாக பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள். அப்போது விழாவில் பேசிய எச்.ராஜா அமைச்சர் சேகர்பாபுவை கடுமையாக விமர்சனம் செய்து பேசியிருந்தார். இது குறித்து பேசிய அவர் ” அமைச்சர் சேகர்பாபு என்னை பொறுத்தவரை பீடை. அவரை சிறைக்கு அனுப்பும் வரை நான் ஓய்வே மாட்டேன்” என பேசியிருந்தார்.

அதைப்போல, அடுத்ததாக பேச வந்த தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை ” இன்றைக்கு சிறைக்கு சென்றவர்கள் மற்றும் மக்கள் பணத்தை பல விதத்தில் கொள்ளையடித்தவர்கள், கள்ளச்சாராயம் காய்ச்சியவர்களெல்லாம் சேர்ந்து தமிழ்நாட்டின் கல்விக்கொள்கையை பற்றி பேசிக்கொண்டிருகின்றனர். சென்னையில் ரவுடி சரித்திர பதிவேட்டில் இருந்தவர் அமைச்சர் சேகர்பாபு இப்படிப்பட்டவர்கள் அமைச்சர்களாக இருந்தால் நாடு விளங்குமா?” என பேசியிருந்தார்.

இதனை தொடர்ந்து இவர்களுடைய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் சேகர் பாபு ” நாங்கள் அண்ணாவால் வளர்க்கப்பட்டவர்கள் கூண்டுக்கிளியல்ல, கூவும் குயில்கள் எனவே, திமுக எப்போதுமே கூவுகின்ற குயிலாக தான் இருக்கிறது. கூண்டுக்கிளியாக அல்ல. மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை தான் எங்களை மாட்ட நினைத்திடும் சிறைச்சாலை.  எப்போதுமே சிறைக்கு அஞ்சாத நெஞ்சங்கள் தான் திமுகவில் உள்ளவர்கள்.

சமீபகாலமாக அண்ணாமலை பேச்சுக்களை பார்க்கும்போது பாஜகவினர் அப்பாவி மக்களை தூண்டிவிட்டு சட்ட ஒழுங்கை கெடுக்க பார்ப்பது போலவே தெரிகிறது. அந்த கட்சியில் இருக்கும் எச்.ராஜா தான் ஏழரை சனி .. அந்த மாதிரி ஏழரை சனிக்கெல்லாம் எங்களால் பதில் சொல்ல முடியாது.அவரை போவே அண்ணாமலை ஒரு டூப் போலீஸ், லஞ்சம் வாங்கிய பேர்விழி, ஆதாரம் இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்கா புளித்ததோ என்று பேசிக்கொண்டு இருக்கிறார்.

அப்படியெல்லாம் பேசவே கூடாது… எங்களை குற்றவாளிகள்..குற்றவாளிகள் என்று சொல்வதற்கு அண்ணாமலையை ஆதாரம் காட்டச் சொல்லுங்கள். நிச்சியமாக நான் இந்த நேரத்தில் சில்கிறேன்.  ஊசிப்போன பண்டமாக இருக்கும் பாஜகவை 2026ல் மக்கள் தூக்கி எறிவார்கள்.  திமுக எப்போதும் மக்களின் பக்கம் இருக்கும். மதத்தை வைத்து மக்களை பிரிக்க நினைத்தால், திமுக அரசு வேடிக்கை பார்க்காது என்றும் அமைச்சர் சேகர் பாபு  தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 25032024
manoj bharathiraja rip
PBKSvGT
Manoj Bharathiraja
eps - Annamalai
GT vs PBKS
Avesh Khan