இன்னோவா கார் அல்ல, ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தமிழத்தில் தாமரை மலராது என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான வேலைகள் தற்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளன. இதற்காக தமிழகத்தில் உள்ள கட்சிகள் தயாராகி வருகின்றது. தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டும், கட்சி பொறுப்புகள் குறித்த அறிவிப்பும் வெளியிட்டு வருகின்றன. நேற்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியர்களிடம் பேசுகையில், தமிழகத்தில் ஏற்கனவே அமைக்கப்பட்ட தேசிய ஜனநாயக கூட்டணி எதிர்வரும் சட்டமன்ற தேர்தலிலும் தொடரும்.
6 மாதத்தில் தமிழகத்தில் மிகப்பெரிய அரசியல் மாற்றம் ஏற்படும். பாஜக கைக்காட்டும் கட்சியே தமிழகத்தில் ஆட்சி கட்டிலில் அமரும். பாஜக வேட்பாளர்களை வெற்றி பெற செய்யும் மாவட்ட தலைவர்களுக்கு இன்னோவா கார் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார். இதுகுறித்து தற்போது நாஞ்சில் சம்பத் கூறுகையில், இன்னோவா கார் அல்ல, ஏரோப்ளேன் வாங்கிக் கொடுத்தாலும் தமிழத்தில் தாமரை மலராது, பிழைக்கவும் முடியாது என்று தெரிவித்துள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களாக உச்சம் தொட்டு வந்த தங்கத்தின் விலை தற்போது மீண்டும் சற்று உயர்ந்துள்ளது. தொடர்ந்து…
கொழும்பு : இலங்கையில் நிலவிய மோசமான பொருளாதர சூழலை அடுத்து ஜனாதிபதி, பிரதமர் பதவி விலகிய நிலையில், நாட்டின் புதிய…
சென்னை : நடைபெற்ற இலங்கை புதிய நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் அதிபர் அனுரகுமார திஸாநாயக்க கூட்டணி…
சென்னை : ஆளும் திமுக அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் செந்தில் பாலாஜி. இவர்…
வெல்லிங்டன் : நியூஸிலாந்தில் 22 வயதான இளம் வயது பெண் எம்பி பார்லிமென்டில் வித்தியாசமான முறையில் மசோதாவை எதிர்த்து, தனது…
வாஷிங்டன் : சமூக வலைத்தளமான பேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவை 'மெட்டா' நிறுவனத்தின் கீழ் இயங்கி வருகிறது. இவற்றை மார்க்…