#BREAKING: கோவில் யாத்திரை அல்ல, முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை..!
சமீபத்தில் தமிழக பாஜக தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. அதில் பாஜக திட்டமிட்டு நடத்திக்கொண்டிருக்கும் வேல் யாத்திரைக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது . இந்த வழக்கை நீதிபதிகள் இன்று ஒத்திவைத்தனர்.
எத்தனை பேர் கலந்து கொள்ள போகிறார்கள் எத்தனை வாகனங்களில் சொல்ல போகிறார்கள் என்ற அறிக்கையை டிஜிபியிடம் மனு தாக்கல் செய்ய பாஜக தரப்பிற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, டிஜிபி சார்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், பாஜகவின் வேல் யாத்திரை பக்தி யாத்திரை அல்ல. முழுக்க முழுக்க அரசியல் யாத்திரை, பாஜகவினர் அத்துமீறி நடந்து கொண்டனர். கடுமையான சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளது தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பாஜக தனிமனித இடைவெளி போன்றவற்றை பின்பற்றுவதில்லை, 10 வாகனங்களில் 30 பேர் மட்டுமே செல்வோம் என நீதிமன்றத்தில் கூறியதை பாஜகவினர் பின்பற்றவில்லை. பாஜக நீதிமன்றத்தில் சொல்வது ஒன்று கடைப்பிடிப்பது வேறொன்றாக உள்ளது என தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, தவறான செயலை நியாயப்படுத்தாதீர்க்கள் என பாஜக தரப்புக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். பாஜகவின் வேல் யாத்திரையால் மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்கள் ஊடகங்களில் பார்த்தோம் என தெரிவித்தனர்.