வெற்றிநடை போடும் தமிழகம் என விளம்பரம் கொடுக்கிறார். இது வெற்றி நடை அல்ல, வெற்று நடை என முக ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற தேர்தல் பரப்புரையில் மக்கள் முன்னிலையில் பேசிய திமுக தலைவர் முக ஸ்டாலின், தமிழகத்தை சீர்குலைத்த ஆட்சிதான் அதிமுக ஆட்சி. கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தை சீர்குலைத்துவிட்டார்கள். ஊழல் வழக்கில் சிக்கிய ஜெயலலிதா, அதிலிருந்து மீள்வதற்கு 6 ஆண்டு காலம் ஆனது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 4 ஆண்டுகள் தனது பதவியை காப்பாற்றி கொள்வதற்காக முதல்வர் பழனிசாமியின் பதற்றமான காலம் கழிந்தது. மக்களை பற்றி கவலைப்படுவதற்கு அவர்களுக்கு நேரம் இல்லை. ஆனால், வெற்றி நடைபோடும் தமிழகம் என முதல்வர் பழனிசாமி விளம்பரம் கொடுக்கிறார். இது வெற்றிநடை போடும் தமிழகம் அல்ல, வெற்றுநடை போட கூடிய தமிழகம்.
வளமான தமிழகம் என்று விளம்பரம் கொடுக்கிறார். ஆனால், அது மக்கள் அல்ல, அதிமுக அமைச்சர்களுக்கு மட்டுமே வளமான தமிழகம். மற்றவர்களுக்கு தாழ்ந்த தமிழகம் தான். 10 ஆண்டு காலத்தில் தொழில் வளர்ச்சி இல்லை, வேலைவாய்ப்பு இல்லை, புதிய முதலீடுகள் இல்லை, மாநில உரிமைகள் பறிபோகிவிட்டது. இதில் கவனம் செலுத்தாமல் ஊழலில் தான் கவனம் இருந்தது என்று விமர்சித்துள்ளார்.
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…