10ஆம் வகுப்பு தேர்ச்சி விவரம் : தமிழில் 100 இல்லை.! ஆங்கிலத்தில் 89 பேர் சதம்.!
10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழில் 100 மதிப்பெண் ஒருவர் கூட எடுக்கவில்லை. ஆங்கிலத்தில் 89 பேர் 100க்கு 100 எடுத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் தற்போது வெளியாகியுள்ளது. நடப்பாண்டு ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 9.4 லட்சம் மாணவ மாணவியர்கள் எழுதியிருந்தனர். அதில் மொத்தம் 91.39% மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதில் மொழிவாரியாக 100 மதிப்பெண்கள் எடுத்தவர்கள் பட்டியலில் தமிழ் உள்ளிட்ட மொழிவாரி பாடத்தில் ஒருவர் கூட 100க்கு 100 எனும் மதிப்பெண்களை எடுக்கவில்லை. ஆங்கிலத்தில் 89 மாணவர்கள் 100 மதிப்பெண் எடுத்துள்ளனர். கணிதத்தில் 3,649 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
அறிவியல் பாடத்தில் 3,584 மாணவர்களும், சமூக அறிவியல் பாடத்தில் 320 மாணவர்களும் 100க்கு 100 மதிப்பெண்களை எடுத்துள்ளனர். அதே போல , மொழிவாரி தேர்ச்சியை கணக்கிட்டால், ஆங்கில படத்தில் அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆங்கிலத்தில் மட்டும் 98.93 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
அடுத்து சமூக அறிவியலில் 95.83 சதவீதத்தினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அறிவியல் பாடத்தில் 95.75 சதவீதத்தினரும், கணிதத்தில் 95.75 சதவீதத்தினரும், மொழிவாரி பாடத்தில் 95.55 சதவீதத்தினரும் தேர்ச்சி பெற்றுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.