50 லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் நீட் தேர்வை ஒழிக்க முடியாது – பிரேமலதா

premalatha

தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் தருமபுரியில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொணட பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது குறித்து, தமிழக வரலாற்றில் இல்லாத அளவுக்கு, சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. 

குடியரசு தலைவர் வரும் சமயத்தில், ஆளுநர் மாளிகை முன் குண்டு வீசப்பட்டுள்ள சம்பவம் பாதுகாப்பில் குளறுபடி இருப்பதை தான் காட்டுகிறது. திமுக எப்போதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ, அப்போதெல்லாம் வெடிகுண்டு கலாச்சாரம், ரவுடிசம் தலை தூங்குவதாக கூறியுள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடர அரசு அனுமதி!

மேலும், நீட் தேர்வு இந்தியா முழுவதும் அமலில் உள்ளது. 50 லட்சம் அல்ல, 50 கோடி கையெழுத்து பெற்றாலும் திமுக-வினரால் இந்த தேர்வை ஒழிக்க முடியாது. அரசியல் ஆதாயத்துக்காக திமுக மாணவர்களை குழப்புகிறது. நீட் போன்ற எந்த தேர்வையும் தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

நீட்டை எதிர்க்கிறேன் என்ற பெயரில் திமுக, குறிப்பாக உதயநிதி ஸ்டாலின் மாணவர்களை குழப்பி வருகிறார். எனவே மாணவர்கள் இதனை பொருட்படுத்தாமல், எந்த தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் தமிழக மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும். எதற்குமே பயனில்லாத சானதானத்தை பற்றி பேசி எந்த பயனும் இல்லை.

தேமுதிக-வின் வாக்கு வங்கி மீண்டும் உயர்ந்து கட்சி எழுச்சி பெறும். அரசியலில் வெற்றியும், தோல்வியும் இயல்பானது. மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி, தொகுதிகள் எண்ணிக்கை பற்றி  கட்சி தலைமை முடிவு எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்