திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 2 வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் 2 வழக்குகள் அல்ல ,2000 வழக்குகள் தொடர்ந்தாலும் கவலைப்படப்போவதில்லை என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முரசொலி பேட்டியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் , தமிழகத்திற்கு அளிக்கப்பட்ட நல்லாட்சி விருது குறித்து கருத்து கூறினார்.மேலும் முரசொலி நாளிதழில், குடியுரிமை திருத்தச் சட்டம் குறித்தும் கருத்து தெரிவித்து இருந்தார்.இது மட்டும் அல்லாமல்
திருமண விழா ஒன்றில் மு.க.ஸ்டாலின் பேசுகையில், பாஜக கூட்டணியில் உள்ள பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். தொடர்ந்து மேற்குவங்கத்தில் மம்தா பேனர்ஜி எதிர்த்துக் கொண்டு வருகிறார். ஆகையால் இந்தியா முழுவதும் இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தமிழகத்தில் எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறது இந்த ஆட்சி என்று பேசினார். மேலும் தமிழகத்திற்கு நல்லாட்சி விருது கொடுத்தவர்களை அடித்து உதைக்க வேண்டும் என்றும், தற்போதைய ஆட்சி கமிஷன் ஆட்சியாக இருக்கிறது என்று பேசினார்.
இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது 2 வழக்குகள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. முதலமைச்சர் சார்பில் அரசு வழக்கறிஞர் கௌரி அசோகன் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்களில், தமிழக அரசு நல்லாட்சி விருது கிடைத்தது குறித்தும், குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக ஸ்டாலினை பேசியது தமிழக அரசுக்கும்,முதலமைச்சருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது.மேலும் ஸ்டாலின் அவதூறு சட்டத்த்தின் கீழ் தண்டிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,இரண்டு நாட்களுக்கு முன் என் மீது 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.2 வழக்குகள் என்ன,2000 வழக்குகள் போட்டாலும், அதைப் பற்றி கவலைப்படப்போவதில்லை . திமுகவினர் பனங்காட்டு நரிகள். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டார்கள் . மிசாவையே பார்த்தவர்கள் நாங்கள் என்று பேசினார்.
சென்னை : அமெரிக்காவின் ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும்…
சென்னை : நேற்று மத்திய அரசு கல்வி உரிமை சட்டத்தில் (RTE) ஒரு முக்கிய திருத்தத்தை கொண்டு வந்தது. அதன்படி,…
சென்னை : வழக்கமாகவே படங்களில் வரும் காட்சிகளை மட்டும் பிரமாண்டமாக எடுக்காமல் படத்தில் இடம்பெறும் பாடல்களையும் பிரமாண்டமாக எடுப்பவர் தான் பிரம்மாண்டத்திற்கு…
சென்னை : மறைத்த முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37-வது ஆண்டு நினைவு நாள் இன்று செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 24) அனுசரிக்கப்படுகிறது. இதனையடுத்து,…
புதுச்சேரி : மத்திய கல்வி அமைச்சகம் நேற்று திடீரென பள்ளி மாணவர்கள் தேர்ச்சி விதிமுறையில் முக்கிய திருத்தம் ஒன்றை கொண்டு வருவதாக…
காஞ்சிபுரம் : இன்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு தலைநகரங்களில் வன்னியர்களுக்கு 10.5% உள்இடஒதுக்கீடு அளிக்காததை…