வட மாநில தொழிலாளர்கள் விவகாரம் – முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக ஆலோசனை.
நேற்று, திருப்பூர் ரயில் நிலையத்தில் வதந்தியால் திடீரென்று வட மாநிலத்தவர்கள் அங்கு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் தொழிலாளி சஞ்சய் குமார் என்பவர் கொலை செய்யப்பட்டதாக வதந்தி பரவியதையடுத்து, வட மாநில தொழிலாளர்கள் பலர் ரயில் நிலையத்தில் குவிந்தனர்.
வட மாநில தொழிலாளர்கள் விவகாரம்
இதுகுறித்து விளக்கமளித்த காவல்துறை தரப்பு, சஞ்சய்குமார் தண்டவாளத்தை அவர் கடக்கும் முயன்ற போது பீகார் தொழிலாளி ரயிலில் அடிபட்டு இறந்ததாக தெரிவித்தனர். மேலும், இதுதொடர்பான வதந்தியாக வீடியோக்களும் வெளியாகி வருகிறது. இந்த வதந்தியான செய்திகளை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் நிலை பற்றி ஆய்வு செய்ய 4 பேர் கொண்ட குழு தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக பீகார் முதல்வர் அறிவித்துள்ளார். இன்று மாலை ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது.
முதல்வர் ஆலோசனை
இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக மைச்சர் கணேசன் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.