வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் : இந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.! வானதி ஸ்ரீனிவாசன் வலியுறுத்தல்.!
வடமாநில தொழிலாளர்கள் மீது பலர் வெறுப்பை வெளியிடுபவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும். – பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் கருத்து.
கடந்த சில தினங்களாக தமிழகத்தில் வேலை பார்த்து வந்த வடமாநில தொழிலாளர்கள் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர். அண்மையில் வடமாநில தொழிலாளர்களை தமிழர்கள் தாக்குவது போல போலியான விடீயோக்கள், வதந்திகள் பரவியது தான் இந்த திடீர் வெளியேற்றத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
வடமாநில தொழிலாளர்கள் : இதுகுறித்து அரசு உடனடி நடடிக்கை எடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதே போல தவறான தகவல்களை பரப்பினால் 7 ஆண்டுகள் வரை சிறை எனவும், 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்தும், வடமாநில தொழிலாளர்கள் நலனுக்காக ஒரு சிறப்பு பிரிவை உருவாக்கியும் தமிழக காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
வானதி ஸ்ரீனிவாசன் : தற்போது இந்த வடமாநில தொழிலாளர்கள் வெளியேறும் விவகாரம் குறித்து கோவை தெற்கு பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் வெளியேறுவது தனக்கு கவலை அளிப்பதாக கூறினார்.
தேசிய பாதுகாப்பு சட்டம் : மேலும், வடமாநில தொழிலாளர்கள் மீது பலர் வெறுப்பை வெளியிடுகிறார்கள் எனவும், அவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், கடந்த மார்ச் 1ஆம் தேதி பிறந்தநாள் விழாவின் போது தன்னை தேசிய அரசியல்வாதியாக காட்டிக்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது அதனை நிரூபிக்க வேண்டிய சூழல் இதுதான். எனவும் பாஜக எம்எல்ஏ வானதி ஸ்ரீனிவாசன் தனது அறிக்கையில் முக்கியமாக குறிப்பிட்டு பேசினார்.
— Vanathi Srinivasan (@VanathiBJP) March 4, 2023