வடகிழக்குப் பருவமழை இந்த தேதி முதல் சூடுபிடிக்கும்! வெதர்மேன் கொடுத்த அலர்ட்!
தமிழகத்தில் 12ம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தீவிரமடையும் என வேதர் மென் பிரதீப் ஜான் தகவலை தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருந்தது. அதனைத்தொடர்ந்து கடந்த மாதம், நவம்பர் 2-வது வாரத்தில் அதிகமான மழைப்பொழிவுக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் , தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம் & யானம், ராயலசீமா, கேரளா & மாஹே ஆகியவற்றில் மழைப்பொழிவு இயல்பை விட அதிகமாக இருக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையமும் எச்சரிக்கை விடுத்திருந்தது.
அதன்படியே, சென்னை, நெல்லை. கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த சூழலில், தமிழகத்திற்கு ஒரு சரியான விடுமுறை நாள் என்றால் நவம்பர் 12 தான். அந்த நாள் முதல் பருவமழை தீவிரம் அடையும் என தமிழ் நாடு வேதர் மென் பிரதீப் ஜான் தகவலைக் கொடுத்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் வளைத்தள பக்கத்தில் “சென்னையிலிருந்து வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையத் தொடங்கும் . நவம்பர் 12 முதல் பருவமழை தீவிரம் அடையும். அந்த நாள் தமிழகத்திற்கு ஒரு சரியான விடுமுறை நாள்….12ம் தேதி முதல் நல்ல மழை பெய்யும் வாரம்” எனக் கூறியுள்ளார்.
A perfect break day for Tamil Nadu….from 12th November the active phase of monsoon picks up. KTCC (Chennai) will start to get into action 1st then followed by other part of Tamil Nadu.
A good rainy week ahead from 12th !!!! pic.twitter.com/hvYiL0TByA
— Tamil Nadu Weatherman (@praddy06) November 10, 2024
இன்று மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.