வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு சற்று குறைந்திருக்கும் – வானிலை ஆய்வு மையம்
வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு சற்று குறைந்திருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த சில நாட்களாக இருந்ததைவிட வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு குறைவாக பெய்யும்.சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் லேசான மழையும், காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு உள்ளது.
வடகிழக்கு பருவமழை அடுத்த 2 நாட்களுக்கு சற்று குறைந்திருக்கும் .வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஆந்திராவை நோக்கி நகர்ந்து சென்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளது.