வடகிழக்கு பருவமழை; இதுவரை 26 பேர் பலி – அமைச்சர் அறிவிப்பு

Default Image

தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 23 கால்நடை உயிரிழந்துள்ளது என்று அமைச்சர் தகவல்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வடகிழக்கு பருவமழை காலத்தில் இதுவரை மொத்தம் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை. இறந்த நபர்களது குடும்பத்திற்கு ரூ.4 லட்சம் நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நேற்று பெய்த கனமழையின் காரணமாக 23 கால்நடை இறப்புகள் பதிவாகியுள்ளது. கனமழையால் 45 குடிசைகள், வீடுகள் சேதமடைந்துள்ளது.

அடுத்த 4 நாட்களுக்கான முன்னெச்சரிக்கை இந்திய வானிலை ஆய்வு மையம் மூலமாக பெற[பெறப்பட்டுள்ளன. இன்றும், நாளையும் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 9-ஆம் தேதி பல இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

மேலும் வரும் 9-ஆம் தேதி இலங்கை அருகே தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என்றும் இது வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது. 10-ஆம் தேதி செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

வடகிழக்கு பருவமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்