இன்னும் 40 நாட்களில் வடகிழக்கு பருவமழை.. வடிகால் பணிகளை நாளை ஆய்வு செய்யும் முதல்வர்!

mk stalin

வடகிழக்கு பருவமழை தொடங்க இன்னும் 40 நாட்களே உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை நாளை ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். இரண்டாம் கட்ட பணிகள் நிறைவடையாமல் பல இடங்களில் அபாயகரமான நிலையில் பள்ளங்கள் உள்ளன என கூறப்படுகிறது.

மழைநீர் வடிகாலுக்கு தோண்டப்பட்ட பள்ளங்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலம் நிலை உள்ளது. எனவே, இந்த சமயத்தில் சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை நாளை ஆய்வு மேற்கொள்கிறார் முதல்வர். அதுமட்டுமில்லாமல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், நீர்வள துறை மூலம் தணிகாச்சலம் கால்வாயினை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணியை முதலமைச்சர் நாளை தொடங்கி வைக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்