வடகிழக்கு பருவ மழை! மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

tnhealthdept

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இன்னும் சுமார் 40 நாட்களில் தொடங்க உள்ள நிலையில், வடகிழக்கு பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மருத்துவ கட்டமைப்புகளும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. அதன்படி, சுகாதாரத்துறை உத்தரவில் குறிப்பாக, குடிநீர் விநியோகத்தின் தரத்தை உறுதி செய்ய வேண்டும்.

கொசுக்கள் உற்பத்தியை ஒழிப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருத்துவக் கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகளையும் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். பருவ கால தொற்றுகளை உள்ளாட்சி அமைப்புகள், சுகாதாரத் துறை ஆகியவை இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடையில்லா மின்வசதி இருப்பதை உறுதி செய்தல்,  காய்ச்சல் பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் மருத்துவ முகாம்கள் மற்றும் தேவைப்படும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழுக்கள் அனுப்பலாம் என்றும் புயல் மற்றும் கனமழைக்கு முன்பே விரைவு சிகிச்சைக் குழுக்களை 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்க வேண்டும் என பல்வேறு விஷயங்கள் தொடர்பாக  அதிகாரிகளுக்கு தமிழக சுகாதாரத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்