வடகிழக்கு பருவமழை தாமதமாக தொடக்கம்.! சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று முதல் தொடங்க உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை பெய்யும் என ஏற்கனவே கூறப்பட்ட நிலையில் இன்று அது குறித்த தகவலை சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதில், ஆண்டிற்கு தமிழகத்துக்கு வரும் மழையளவில் 60 சதவீதம் தரும் வடகிழக்கு பருவமழை 20ஆம் தேதி பெய்ய தொடங்கும் என கணிக்கப்பட்ட நிலையில், சிட்ரஸ் புயல் காரணமாக இன்று (29ஆம் தேதி) வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது.
காலம் தாழ்த்தி பெய்வதால் மழையின் அளவு குறையாது எனவும் , மாறாக கணிக்கப்பட்ட அளவினை விட அதிகமாக தான் பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது. வழக்கமாக நவம்பர் டிசம்பர் மாதகாலகட்டத்தில் 45 செமீ பெய்யும் மழையளவு சராசரியாக பெய்ய கூடும்.
கடந்த ஆண்டு 2021இல் 71 செமீ மழையளவு பதிவாகியுள்ளது. அதே போல, 2020 மற்றும் 2019ஆம் ஆண்டும் சராசரியை விட மழையளவு அதிகமாக தான் பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தாண்டு சராசரியை கணக்கிட்டு 88 -112 சதவீதம் மழைபெய்ய கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்தாண்டு அதிக புயல் உருவாகவும் வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.