வடகிழக்கு பருவமழை : திமுக அரசு மெத்தனமாக இருந்துள்ளது – ஈபிஎஸ்
வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை திமுக அரசு திட்டமிடவில்லை. வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டில் திமுக அரசு மெத்தனமாக இருந்துள்ளது.
சென்னை : தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் ஆய்வு செய்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதியில், நேரில் ஆய்வு செய்தார். மேலும்,மழை வெள்ள பாதிப்புகளை பார்வையிட்டு,மக்களிடம் குறைகளை கேட்டறிந்து வருகிறார்.அதே நேரத்தில்,நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
அதன்பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகளை திமுக அரசு திட்டமிடவில்லை. வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டில் திமுக அரசு மெத்தனமாக இருந்துள்ளது. திமுக அரசு உரிய முன்னேற்பாடு செய்யாததால், மழையால் சென்னை மக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.