வடகிழக்கு பருவமழை – முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. இதனிடையே அக்டோபர் மாதம் 3-ஆம் வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக இன்று முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சருடனான ஆலோசனையில் தலைமை செயலாளர் சண்முகம்,அமைச்சர்கள்,சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏரிகள், குளங்கள் தூர் வாருதல், மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் மறு சீரமைப்பு பணிகளை கையாள்வது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)