தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கேரளத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது – மேலும் மூன்று மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. அந்த வகையில் விருதுநகர், நெல்லை, தென்காசி , ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கன மழைக்கு வாய்ப்பு என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வானிலை ஆய்வாளர் பாலச்சந்திரன் கூறுகையில், இன்று அக்டோபர் 28ம் தென்மேற்கு பருவமழை இந்திய பகுதிகளிலிருந்து விலகி வடகிழக்கு பருவமழை தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் துவங்கியுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்தது அதிகபட்சமாக மதுரை மாவட்டம் வேலூரில் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மேலும் அடுத்து வரும் இரண்டு தினங்களில் பொருத்தவரையில் தமிழகம் மற்றும் புதுவையில் தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும். நெல்லை விருதுநகர், தென்காசி, மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதியை பொருத்தவரை நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு என்றும் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறியுள்ளார்.
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…