வடகிழக்கு பருவமழை ! முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கும் நிலையில் தமிழகத்திற்கு இன்று ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடுத்தது வானிலை ஆய்வு மையம்.இதன் காரணமாக தேனி,திண்டுக்கல்,கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் தெரிவித்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.