Tamilnadu Weather - Chennai fog [File Image]
இன்று தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளான இன்று போகி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனால் பல்வேறு இடங்களில் பனி மூட்டம் அதிகமாக இருக்கிறது. இதோடு சேர்த்து தற்போது பனிமூட்டமும் அதிகமாக காணப்படுகிறது.
லட்சத்தீவுக்கு விமான சேவை.! சென்னை விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு.!
தனியார் வானிலை ஆய்வு மைய தலைவர் பிரதீப் ஜான் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் குறிப்பிடுகையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வட தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் பனிமூட்டம் தொடரும் எனவும் , 16 , 17ஆம் தேதிகளில் கடும் குளிர் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், வடகிழக்கு பருவமழையானது தமிழகத்திற்கு இந்த வருடம் நல்ல மழையை கொடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை முடிந்துள்ள நிலையில். தற்போது காற்று வீச இன்னும் துவங்கவில்லை. அதன் காரணமாக பனிமூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
அதிகபட்சமாக, வட தமிழகம் , டெல்டா மாவட்டங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். தலைநகர் சென்னையில் காலை 9 வரையில் சாலைகள் பெரும்பாலான இடங்களில் பனிமூட்டமாக காணப்படும். 9 மணிக்கு பிறகுதான் சாலைகள் தெளிவாக தெரியும் வண்ணம் இருக்கும். இதனால் சென்னை மெரினா உள்ளிட்ட பிரதான சாலைகள் வாகனங்கள் தெரியாத வண்ணம் பனிமூட்டம் நிலவுகிறது. வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் குளிர் இந்த பகுதிகளில் அதிகமாக இருக்கும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
லக்னோ : லக்னோவில் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணிகளுக்கு இடையே நடைபெற்று…
அமெரிக்கா: கூகுள் நிறுவனம் Veo 3 என்ற பெயரில் Al தொழில்நுட்பத்தின் அடுத்த கட்ட வீடியோ கருவியை அறிமுகம் செய்து…
நீலகிரி : தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே துவங்குவதால், மே 25 மற்றும் 26-ம் தேதி கோவை, நீலகிரி ஆகிய 2…
லக்னோ : ஐபிஎல் 2025 லக்னோவில் இன்று இரவு 7.30 மணிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ்…
டெல்லி : டெல்லியில் நாளை (மே 24) நடைபெறவுள்ள 'நிதி ஆயோக்' கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து…
சென்னை : நடிகர் சிம்பு தற்போது தக் லைஃப் படத்தின் ப்ரமோஷன் பணியில் பிசியாக உள்ள நிலையில், அவரது 50வது…